sudha kongara directing simbu next movie

Advertisment

'துரோகி ' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச் சுற்று படத்தை இயக்கியதன் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி பலரதுபாராட்டுகளைப் பெற்றதோடு, சுதா கொங்கராவைமுன்னணி இயக்குநர்அந்தஸ்திற்கு உயர்த்தியது. தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இப்படம் தற்போது அக்‌ஷய் குமார் நடிப்பில் இந்தியில் உருவாகி வருகிறது. இப்படத்தையும் சுதா கொங்கராவேஇயக்கிவருகிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="58fcb8c4-1607-4dc5-ab0c-fc53ef8bfa9b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_8.jpg" />

இதனையடுத்துகே.ஜி.எஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாக தெரிவித்திருந்தது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் கதாநாயகன் யாரால் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோ குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக் பணிகளில் ஈடுபட்டு வரும் சுதா கொங்கரா, அத்துடன் சேர்த்து இந்த படத்தின் பணிகளிலும் கவனம் செலுத்தி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.